மழை நீரும் விவசாயமும்
பெருமதிப்பிற்குரிய இந்த பேச்சு போட்டியின் நடுவர் அவர்களே மரியாதைக்குரிய ஆசிரியர் பெருமக்களே மற்றும் எனது அருமை மாணவ மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு ஒரு முக்கியமான தலைப்பு இன்றைய தினம் மிக தேவையான ஒரு தலைப்பு. இந்த தலைப்பிலேயே பேச எனக்கு வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மழை நீரும் விவசாயமும் இந்த இரண்டு குறள்கள் மூலம் அய்யன் திருவள்ளுவர் மழையின் மகத்துவத்தையும் வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். எனது இன்றைய தலைப்பு.நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு என்பது வள்ளுவரின் வாக்கு. இன்றும் ஏர்பின்னது உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மண் என்பதும் அய்யன் திருவள்ளுவரின் வாக்கு.இந்த இரு குரல் மூலம் அய்யன் திருவள்ளுவர் மழையின் அவசியத்தையும் உழவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார் கம்பநாடர். மழை மற்றும் உறவு இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இந்தியா ஒரு வேளாண் நாடு. நமது நாட்டில் 57 சதவீத மக்கள் வேளாண்மையின் நம்பியே வாழ்கிறார்கள். நமது நாட்டில் மழையானது இரு பெரும் பருவக்காற்றை நம்பி இருக்கிறது. அவை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்திய அரசாங்கம் ஐந்தாண்டு திட்டங்கள் மூலமாக நாடெங்கிலும் முக்கியமான அணைகளை பல்வேறு ஆறுகளின் குறுக்கே கட்டியுள்ளார்கள். நமது தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள் மேட்டூர் , வைகை,பாபநாசம் , மணிமுத்தாறுமற்றும் கிருஷ்ணகிரி. இந்த அணைகளின் மூலமாக பல்வேறு கால்வாய்களை வெட்டி தமிழ்நாட்டில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் நமது தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் ஏரி குளம் கண்மாய் ஊருணி என பல்வேறு நீர்நிலைகளை நிறுவி அதன் மூலமும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாசனமுறைகள் எதுவாயினும் அனைத்திற்கும் மூலம் மறைநீர் ஆகும். மழை இல்லையேல் விவசாயம் இல்லை. கடந்த இரு பத்தாண்டுகளில் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தோமானால் நாம் மழைக்கு உறுதுணையாக இருக்கும் காடுகளையும் மரங்களையும் நமது பேராசையின் விளைவாக அளித்து வருகிறோம். சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துகிறோம் நகரமயமாக்கம் செய்கிறோம் தொழில் வளத்தை மேம்படுத்துகிறோம் என்ற காரணங்களுக்காக பெருமளவில் மரங்களையும் காடுகளையும் அழித்ததன் விளைவாக மழை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் சமீப நாட்களாக அரசாங்கத்தினுடைய பெரும் முயற்சியினாலும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் மரம் வளர்த்தல் முக்கியத்துவத்தை பெரிய அளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ஏராளமான மரங்கள் நடப்பட்டு அதன் முக்கியத்துவம் நாடுமுழுவதும் உணரப்படுகிறது. மேலும் ஏரிகள் குளங்கள் நதி பாதைகள் ஆகியனவும் தூர்வார படுகின்றன. இந்த விழிப்புணர்வு மென்மேலும் பரவி நாம் மறுபடி இறந்த மழை அளவை பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து வேளாண்மையை பல மடங்கு பெருக பசுமைப் புரட்சி திட்டத்தை கையாண்டோம். தற்போதைய சூழ்நிலையில் குறைந்த நீரை உபயோகித்து அதிக மகசூல் அடைவது எப்படி என்ற ஆராய்ச்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. இஸ்ரேல் போன்ற நாடுகளில் நாம் உபயோகிப்பதில் பத்தில் ஒரு பங்கு நீரை பயன்படுத்தி மிகச்சிறந்த உற்பத்தி எடுக்கிறார்கள். அண்மையில் நமது பாரத பிரதமர் இஸ்ரேல் சென்ற பொழுது அந்த தொழில் நுட்பங்களை இந்தியாவில் பயன்படுத்துவது பற்றி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நகரமயமாக்கம் மற்றும் குடியிருப்பு ஆகிய காரணங்களுக்காக விடை நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே குறைந்த விலை நிலப்பரப்பு மற்றும் குறைந்த தண்ணீர் அளவை பயன்படுத்தி நமது வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமை நமது அரசாங்கத்திற்கும் நமக்கும் உள்ளது. நமது அரசாங்கம் தரிசு நில மேம்பாட்டு திட்டம் மற்றும் சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றின் மூலமாக விவசாய உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மாணவ சமுதாயம் என்பது வருங்கால இந்திய சமுதாயம். எனவே மாணவர்களாகிய நாம் அனைவரும் இன்றைய தினம் மேற்கொள்ளவேண்டிய சூளுரை என்னவென்றால் நீர்நிலை மாசுபாட்டைத் தடுத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவராவது மேற்கொண்டால் தகுந்த முறையில் அதைக் களைவது, ஒவ்வொரு மாணவரும் மரம் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவது , மற்றும் தண்ணீர் சிக்கனம்ஆகியவையே. இவற்றை நாம் முழுமையாக மேற்கொண்டோம் ஆனால் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய இயலும்.
Comments
Post a Comment