மழை நீரும் விவசாயமும்
பெருமதிப்பிற்குரிய இந்த பேச்சு போட்டியின் நடுவர் அவர்களே மரியாதைக்குரிய ஆசிரியர் பெருமக்களே மற்றும் எனது அருமை மாணவ மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு ஒரு முக்கியமான தலைப்பு இன்றைய தினம் மிக தேவையான ஒரு தலைப்பு. இந்த தலைப்பிலேயே பேச எனக்கு வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மழை நீரும் விவசாயமும் இந்த இரண்டு குறள்கள் மூலம் அய்யன் திருவள்ளுவர் மழையின் மகத்துவத்தையும் வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். எனது இன்றைய தலைப்பு.நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு என்பது வள்ளுவரின் வாக்கு. இன்றும் ஏர்பின்னது உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மண் என்பதும் அய்யன் திருவள்ளுவரின் வாக்கு.இந்த இரு குரல் மூலம் அய்யன் திருவள்ளுவர் மழையின் அவசியத்தையும் உழவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார் கம்பநாடர். மழை மற்றும் உறவு இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இந்தியா ஒரு வேளாண் நாடு. நம...